மகாத்மா காந்தியின் செல்வாக்கு உத்வேகம் அளித்தது: பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 'தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு' நிகழ்ச்சி ஐ.நா. பொதுச் சபை தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் செல்வாக்கு உத்வேகம் அளித்தது: பிரதமர் மோடி புகழாரம்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை தலைமையகத்தில் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும் சூரியப் பூங்காவும் தொடங்கப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 'தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு' நிகழ்ச்சிகளில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி ஒருபோதும் தனது வாழ்க்கையில் செல்வாக்கை உருவாக்க முயற்சிக்கவில்லை, ஆனால், அது உலகம் முழுவதும் உத்வேகம் அளித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசியதாவது,

'எப்படி ஈர்க்க வேண்டும்' என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் காந்தயின் பார்வை 'எப்படி ஊக்குவிப்பது' என்பதாக இருந்தது. மகாத்மா காந்தியின் பங்களிப்புகள், நாட்டின் சுதந்திர போராட்ட வீரராக இருப்பதைக் கடந்து, ஜனநாயகத்தின் சக்தியை புரிந்து கொண்டார். மக்கள் எந்த விதத்திலும் ஆட்சியைச் சார்ந்து தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதை சுட்டிக்காட்டினார்.

அவரை ஒருபோதும் சந்திக்காதவர்களின் வாழ்க்கையின் ஊக்க சக்தியாக திகழ்கிறார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலாவின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் மகாத்மா காந்தியின் பார்வையை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், ஊழல் போன்ற தன்னலமற்ற இந்த சமூக வாழ்க்கையில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாக செயல்படுகிறது.

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால், சுய ராஜ்ஜியத்தின் அடிப்படைக் கூறுகளின் தன்னம்பிக்கையாக இருந்திருப்பார். இந்தியா இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால்களைத் தீர்க்க அவரது பார்வை ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

விருப்பமில்லா வேலை, மனசாட்சியற்ற மகிழ்ச்சி, தன்மையில்லாத அறிவு, நெறிமுறைகள் இல்லாத வணிகம், மனிதநேயம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத மதம், கொள்கை இல்லாத அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக போராடியவர் என்று புகழாரம் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com