எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு: ஜப்பான் ஆச்சரியம்!

ஜப்பான் எரிமலை வெடிப்பால் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

News image

புதிதாக உருவான நிலப்பரப்பு (படம்: கியோட்டோ நியூஸ்/ AP)

Updated On :2 பிப்ரவரி 2024, 8:49 am IST

டோக்கியோ: கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது.

தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமாவுக்கு 1 கிமீ தூரத்தில் உள்ள இந்தப் பெயரிடப்படாத எரிமலை மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்கத் தொடங்கியது.

வெடிப்பு நிகழ்ந்த பத்து நாள்களுக்குள் எரிமலை சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேகரமாகி அதன் முனை கடலுக்கு மேலாக உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

நவம்பர் தொடக்கத்தில் உருவான இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் உயரத்தோடும் எழுந்துள்ளது. ஆனால் இந்த தீவு இப்படியே நிலையாக இருக்காது எனத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 “எரிமலை வெடிப்பு என்பது இந்தப் பகுதிகளில் அடிக்கடி நடப்பது என்றாலும் தீவு போலான நிலம் உருவாவது குறிப்பிடத்தகுந்தது” என்கிறார் ஜப்பான் கடலியல்சார் ஆய்வு முகமையின் ஆராய்ச்சியாளர் யுஜீ உசாய்.

எரிமலைக்கு அருகில் உருவான நிலம்

எரிமலைக்கு அருகில் உருவான நிலம்

எரிமலை வெடிப்பு தணிந்த பிறகு உருவான இந்த நிலம், நிலைத்தன்மையாக இல்லாததால் எளிதில் அலைகளால் அடித்து செல்லப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சேர்மானம் குறித்தும் தீவின் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்பும் இயற்கை பேரிடரினால் உலகில் பல இடங்களில் தீவுகள் உருவாக்கியுள்ளன.

2013-ல் நிசினோஷிமா பகுதியில் பசுபிக் பெருங்கடலில் உள்ள எரிமலை வருடக்கணக்கில் வெடித்த துகள்களாலும் பாறைகளாலும் புதிய நிலம் உருவானது. அதே ஆண்டில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது புதிய நிலப்பரப்பு தென்பட்டது. 

உலகம் முழுவதும் தற்போது 1500 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 111 எரிமலைகள் ஜப்பானில் உள்ளன. 

ஐவோ ஜிமா இரண்டாம் உலகப் போரின்போது புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.