/

காதலர்கள் வெட்டிக்கொலை.. பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்!

பாகிஸ்தானில் ஆணவக் கொலைகள் கணிசமாக நடைபெறுகிறதாகத் தெரிவிக்கப்படுகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2023, 11:39 am

DIN

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது தங்கையையும் அவரது காதலரையும் கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

லாகூரில் இருந்து 375 கிமீ தூரத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டம் அலிபூர் தாலுகாவில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.

முலாசீம் ஹூசைன் என்பவர், தனது தங்கை ஜைதூன் பிபீயையும் (20) அவரது காதலர் என சந்தேகப்பட்ட பயாஸ் ஹூசைனையும் கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஹசீப் ஜாவீத் தெரிவித்தாவது:

நேற்று (செவ்வாய்கிழமை) முலாசீம் அவரது தங்கையைப் பின் தொடர்ந்து சென்று பயாஸ் உடன் இருக்கும்போது இருவரையும் அதே இடத்தில் கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார் 

கொலை செய்த பிறகு முலாசீம் காவல்துறையில் வந்து சரணடைந்துள்ளார். குடும்பத்தின் கெளரவத்திற்காக இதனை செய்ததாக முலாசீம் காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைபடி ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டில் குறைந்தது 1000 பெண்களாவது ஆணவக் கொலைக்குப் பலியாகிறார்கள். பெரும்பாலும் இது போன்ற கொலைகளில் அந்தப் பெண்ணின் வீட்டாரே காரணமாக உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.