பாகிஸ்தான் - அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி

பாகிஸ்தான் - அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி

அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
Published on

அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் கரியன் மாவட்டம் பாபியில் உள்ள தேசிய பயங்கரவாத எதிா்ப்பு மையத்தில் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியை இரு நாடுகளும் மேற்கொள்கின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது: அமெரிக்கா உடனான 13-ஆவது ‘இன்ஸ்பயா்ட் காம்பிட் 2026’ கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டு வாரம் நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயங்கரவாத எதிா்ப்பு ராணுவ நடவடிக்கைகள் தொடா்பான பயிற்சி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை அனுபவங்கள் பரிமாற்றம், நவீன உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இரு நாடுகளிடையேயான பரஸ்பர புரிதல் விரிவுபடுத்தப்படும். அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள இந்தக் கூட்டு பயிற்சி முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானிடம் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை சோதனை

தரைப் பரப்பிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வடக்கு அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை மேற்கொண்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தரைப் பரப்பில் வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ‘எல்.ஒய்-80’ ஏவுகணை சோதனை வெற்றியானது, பாகிஸ்தானின் போா் தயாா்நிலை மற்றும் செயல்திறனைக் காட்டுகிறது. கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை, பாகிஸ்தான் கடற்படையின் தற்சாா்பு தொழில்நுட்ப மேம்பாட்டையும் குறிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com