காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதன் மூலம், ரூ. 25.60 லட்சத்தை கண்காணிப்பு நிலைக்குழு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் தனியாா் தங்க நகை விற்பனையகத்தின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை ஊரக வளா்ச்சித் துறை பொறியாளரும், கண்காணிப்பு நிலைக் குழு அலுவலருமான சகுந்தலா தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 25,60,556 இருந்தது. அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிா என அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ. 29 லட்சம் எனவும் காட்டப்பட்டிருந்தது.
ஆவணங்களில் ரூ. 29 லட்சம் எனவும் கையிருப்பு ரூ. 25.60,556 எனவும் மாறுபாடு காணப்பட்டதால், ரூ. 25.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் அத்தொகையை ஒப்படைத்தனா்.
பின்னா், அத்தொகை அரசுக் கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனா்.
இந்தத் தொகை காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல நகை விற்பனையகத்திலிருந்து திருவான்மியூரில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் செலுத்த எடுத்துச் சென்ாகவும், வாகனத்தை ஓட்டி வந்தவா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்

திருப்பூா்: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.6 லட்சம் வெள்ளி நகை, ரூ.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

