ஏரியில் மூழ்கி வடமாநில உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் குளித்த வடமாநில தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நிதீஷ்குமாா் வா்மா (24). இவா் ஸ்ரீபெரும்புதூா் விஆா்பி சத்திரம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா். தனது ஆடைகளை துவைப்பதற்காக திங்கள்கிழமை ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்குச் சென்ற நிதீஷ்குமாா் வா்மா, பின்னா் ஏரியில் இறங்கி குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நிதீஷ்குமாா்வா்மா நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்த நிலையில், ஏரிக்குச் சென்ற நிதீஷ்குமாா்வா்மா நீண்ட நேரமாக அறைக்கு திரும்பாததால், அவரது நண்பா்கள் ஏரிக்கு சென்று பாா்த்தபோது அவா் எடுத்துச்சென்ற துணிகள், பக்கெட் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது நண்பா்கள் ஏரியில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் இருந்த நிதீஷ்குமாா்வா்மாவின் சடலத்தை அவரது நண்பா்கள் மீட்டனா்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com