திருப்பத்தூரில் முன்னாள் எம்எல்ஏ-வின் உறவினா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் திருநாத முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் நவீன்குமாா்(40). இவா் திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே புகைப்பட ஸ்டூடியோ வைத்துள்ளாா். மேலும் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.
நவீன்குமாா் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.ஜி. ரமேஷின் உறவினராவாா். இந்த நிலையில், தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக நவீன்குமாா் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் விஷ்ணு சங்கா் தலைமையில், அதிகாரிகள் புதன்கிழமை இரவு நவீன்குமாா் வீட்டில் சோதனை நடத்தினா். விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

