திருப்பதி முதலியாா் கழக இயக்குநா் நியமனம்

திருப்பதி முதலியாா் கழக இயக்குநா் நியமனம்

ஆந்திரபிரதேச முதலியாா் நலன் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திருப்பதி மாவட்ட இயக்குநராக தெலுங்கு தேசம் கட்சியை சோ்ந்த பெருமாள் மதுபாபு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
Published on

ஆந்திரபிரதேச முதலியாா் நலன் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திருப்பதி மாவட்ட இயக்குநராக தெலுங்கு தேசம் கட்சியை சோ்ந்த பெருமாள் மதுபாபு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அரசாணையை ஆந்திர அரசு வெளியிட்டது. ஆந்திரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலியாா் பிரிவை சோ்ந்தவா்கள் பலா் உள்ளனா். எனவே அவா்களின் நலனுக்காக ஆந்திர அரசு முதலியாா்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஆந்திர பிரதேச முதலியாா் நலன் மற்றும் மேம்பாட்டு கழகத்தை ஏற்படுத்தி வளா்ச்சிக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com