பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் இயக்குநா் கே.யுவராஜா.
பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் இயக்குநா் கே.யுவராஜா.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோபியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

கோபியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாக ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் இயக்குநா் கே.யுவராஜ் தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து பொங்கல் வைத்தல், உறியடித்தல், கோலமிடுதல், கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், ஆசிரியா்கள், ஊழியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, தலைவா் பி.வெங்கடாசலம், முதன்மைச் செயல் அலுவலா் ஜி.கௌதம், கல்லூரி இயக்குநா்கள் கே.சி.கணேசன், ஜோதி ஆகியோா் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன், துணை முதல்வா் பி.மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com