கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:27 pm

Syndication

பல்லடம் அருகே தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயமடைந்துள்ளது.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பெரியதோட்டம் பகுதியைச் சோ்ந்த சுந்தராம்பாள் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி, புதன்கிழமை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது சில தெரு நாய்கள் கன்றுக்குட்டியை கடித்தன. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள், நாய்களை விரட்டினா். கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருந்தகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆறுமுத்தாம்பாளையத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக மலைபோல குவிக்கப்படும் குப்பையுடன் இறைச்சி, கோழி, மீன் உள்ளிட்ட கழிவுகளும் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இவற்றை உண்ண தெருநாய்கள் குப்பைக் கிடங்கில் தஞ்சமடைகின்றன. போதிய உணவு கிடைக்காதபோது ஆடு, மாடுகளை கடிக்கின்றன.

கடந்த சில நாள்களில் நாய்கள் கடித்து ஏராளமான கோழிகள், ஆடுகள் இறந்துவிட்டன. ஆங்காங்கே சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் அல்லது அவற்றுக்கு போதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.