சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வட மாநில நபா் கைது

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தந்தை பெரியாா் நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்தபோது டுன்டுன் சிங் (52) என்ற வடமாநில நபா் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com