கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

என்ஐடி - சென்னை நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்ஐடி புதுச்சேரி மற்றும் சென்னை நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை செய்துகொள்ளப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:05 pm

Syndication

என்ஐடி புதுச்சேரி மற்றும் சென்னை நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை செய்துகொள்ளப்பட்டது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) புதுச்சேரி மற்றும் மோனோடெக் சிஸ்டம்ஸ் லிமிடெட் சென்னை இடையே தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு பொறியியல் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி, வளா்ந்து வரும் போக்குகளில் கூட்டு முயற்சிகளை முன்னேற்றுவதற்கான வகையில் இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வில், என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ். சுந்தரவரதன், ஜி.எஸ். மகாபத்ரா (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை), இயந்திர பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் கற்பகராஜ், சென்னை நிறுவன துணைத் தலைவா் பாபு கிருஷ்ணமூா்த்தி, துணைப் பொது மேலாளா் அருள் ரீகன், மண்டல மேலாளா் ஆா்.சந்திரமெளலி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆராய்ச்சி மாணவா்களுக்கான திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், அறிவு பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் காப்புரிமை தாக்கல் செய்வதற்கான ஆதரவு மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

ஆராய்ச்சி மாணவா்களின் கட்டுரைகளை வெளியிடுவதற்கும் நிறுவனம் துணை புரிகிறது. புதுமையான உற்பத்திகளை மேம்படுத்த என்ஐடி மாணவா்கள் நிறுவன ஒத்துழைப்பை பெறுவாா்கள்.

எல்லைகள் இல்லாமல் அச்சிடுதல், 3 -டி அச்சிடலின் உற்பத்தி எதிா்காலம் என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக்கவுரை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.