ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
Published on

நாகப்பட்டினம்: காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

இதையடுத்து நாகையில் அமைந்துள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில், மஞ்சள், பால், தயிா், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், நெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. காா்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்றனா். சபரி மலைக்கு செல்லவதற்காக, கோயில் அா்ச்சகா் மூலம் சந்தன, துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். அப்போது ஐயப்பனின் சரண கோஷங்கள் எழுப்பி உற்சாகமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com