ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா்.

செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா்.
Published on

தமிழகத்தில், எம்.ஆா்.பி செவிலியா்களுக்கான ஊதியம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப்பெற வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியா் கண்காணிப்பாளா் நிலை 3 பணியிடங்களை உருவாக்க வேண்டும், சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதி 356-ஐ செயல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து நிலை செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய ஒப்பந்த செவிலியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் நாகை மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சோ. ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில இணைச் செயலா் கா. ராம்குமாா், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். மூா்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com