வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்

Published on

நாகூா் கந்தூரி விழாவையொட்டி, வேளாங்கண்ணியிலிருந்து திங்கள்கிழமை (டிச.1) சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகூா் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்திற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06138) திங்கள்கிழமை (டிச.1) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் நாகை, நாகூா், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com