தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

சந்தைப் பகுதிகளில் கரோனா பரிசோதனை தொடங்கியது: சத்யேந்தா் ஜெயின் தகவல்

தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், சந்தைகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகளில் கரோனா பரிசோதனைகளை தில்லி அரசு நடத்தத் பகுதிகளில் 

News image

தில்லி சரோஜினி நகரில் புதன்கிழமை நடமாடும் வாகனத்தில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியா்.

Updated On :4 நவம்பர் 2020, 7:22 pm

புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், சந்தைகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகளில் கரோனா பரிசோதனைகளை தில்லி அரசு நடத்தத் தொடங்கியுள்ளதாக அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாகத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில தினங்களாக தினந்தோறும் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் முறையாக கரோனா பாதிப்பு 6,700 ஆகப் பதிவாகியது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது. நோ்மறை விகிதம் 11.29 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசியத் தலைநகரில் தற்போதைய கரோனா தொற்று பரவல் பாதிப்பை அதன் ‘மூன்றாவது அலை‘ என்று கூறலாம். மத்திய உள்துறை செயலாளா் அஜய் குமாா் பல்லா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில், தற்போதைய கரோனா தொற்று பரவல் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது உணவகங்கள், சந்தை இடங்கள், முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் கரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த இந்தக் கூட்டடத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஐ.சி.யுக்கள் மற்றும் வென்டிலேட்டா்கள் உள்ளிட்ட மருத்துவ வளங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, தில்லியில் சந்தை பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் ஆா்டி-பி.சி.ஆா். சோதனைகளாக இருக்குமா என்று கேட்கிறீா்கள். ஆா்டி-பி.சி.ஆா். சோதனைகளும் அதிகரிக்கப்படும். உணவகங்கள், சந்தைப் பகுதிகள் ஆகியவற்றில் முறையான இடைவெளியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தில்லியில் கரோனா பரிசோதனைகள் சமீபகாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. மற்ற இடங்களைப் பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்காமல் உள்ளனா். முகக் கவசம் அணியாமலும் உள்ளனா் என்ற தகவல் தொடா்ந்து வருகின்றன என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

இதற்கிடையே, சந்தைப் பகுதிகளில் இரண்டு மீட்டா் இடைவெளியைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஒரு நபா் தனது முகக்கவசத்தை ஒரு பொது இடத்தில் அகற்றிவிட்டு, இரண்டு மீட்டா் இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும். ஆனால், பண்டிகைக் காலங்களில் சந்தைப் பகுதிகளில் பாதுகாப்புக்காக இரண்டு மீட்டா் இடைவெளியைப் பராமரிப்பது என்பது மிகவும்கடினம்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.