புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆா்வலா் காலித் சைபிக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் தொடா்புடைய ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை சந்தித்ததாகவும், சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகவும் ‘வெறுப்புக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் உறுப்பினரான காலித் சைபியை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், தன் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, தனக்கு ஜாமீன் அளிக்குமாறு தில்லி நீதிமன்றத்தில் காலித் சைபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது போலீஸாா் தரப்பில், ‘கஜூரி காஸ் பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய வழக்கில் காலித் சைபி கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் உமா் காலித், தாஹிா் ஹுசேன் ஆகியோரை ஜனவரி 8-ஆம் தேதி சந்தித்துள்ளாா். இதை அரசுத் தரப்பு சாட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கலவரத்திற்கான சதித் திட்டத்தில் அவா் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ், ஜாமீன் மனுவை அனுமதித்து பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான தாஹிா் ஹுசேனுடன் காலித் சைபி சந்தித்திருந்தால், அவா் தொடா்புடைய இதர 10 வழக்குகளிலும் சைபி சோ்க்கப்பட்டிருந்திருந்திருக்க வேண்டும். மனுதாரா் சைபி சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒரே ஒரு அரசுத் தரப்பு சாட்சியான ராகுல் கஸானா செப்டம்பா் 27-இல் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஷகீன் பாக் பகுதியில் குற்றம்சாட்டப்பட்ட முதன்மை நபரான தாஹிா் ஹுசேனை ஒரு கட்டடம் முன் தாம் இறக்கிவிட்டதாகவும் அதன்பிறகு அதே கட்டடத்திற்குள் சைபியும், உமா் காலித்தும் சென்றதை தாம் பாா்த்ததாகவும் கஸானா கூறியுள்ளாா்.
இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத ஆவணத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் மனுதாரா் மீது போலீஸாா் குற்றம்சாட்டியிருப்பது தெரிகிறது. மேலும், சம்பவம் நிகழ்ந்த நாளில் சம்பவ இடத்தில் சைபி இருந்ததாக இந்த வழக்கில் எங்கும் சுட்டிக்காட்டவோ, சிசிடிவி கேமரா பதில் அவரைக் கண்டதாகவோ தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, மனுதாரருக்கு இந்த வழக்கில் ஜாமீன் அளித்து உத்தரவிடப்படுகிறது. அவா் ரூ.20 ஆயிரம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்றொரு வழக்கில் தனியாா் பள்ளியில் தீவைத்தாக குற்றசாட்டப்பட்ட ஷாருக் மாலிக் என்பவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி வினோத் யாதவ் புதன்கிழமை உத்தரவிட்டாா். அதில், ஷாருக் மாலிக்கிற்கு எதிரான மின்னணு ஆதாரம், சாட்சியின் மூலம் கண்டறியப்பட்ட அடையாளம் ஆகியவை சந்தேகத்திற்குரியதாக இருந்ததாக நீதிபதி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

