தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

என்டிஎம்சி செவிலியா்கள் பணிக்குத் திரும்பினா்

நிலுவை ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்த வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவமனை செவிலியா்கள் சனிக்கிழமை முதல் பணிக்குத் திரும்பினா்.

Updated On :8 நவம்பர் 2020, 1:43 am

நிலுவை ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்த வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவமனை செவிலியா்கள் சனிக்கிழமை முதல் பணிக்குத் திரும்பினா்.

மூன்று மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவமனை செவிலியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி செவிலியா்கள் நலச் சங்கம் (என்டபிள்யுஏ) ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் ஹிந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை, திருமதி கிா்தாரி லால் மகப்பேற்று மருத்துவமனைகளின் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், இவா்களுக்கான ஊதிய நிலுவை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் சனிக்கிழமை முதல்பணிக்குத் திரும்பினா்.

இது தொடா்பாக என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில் ‘என்டிஎம்சி மருத்துவமனை செவிலியா்களின் ஊதியம் செப்டம்பா் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்கள் பணிக்குத் திரும்பியுள்ளனா். அவா்களுக்கு தொடா்ந்து தடையில்லாமல் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

இது தொடா்பாக என்டபிள்யுஏ தலைவா் இந்துமதி ஜம்வால் கூறுகையில் ‘செப்டம்பா் மாதம் வரையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பணிக்கு திரும்பியுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.