தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பட்டாசு வெடிக்கத் தடை: தில்லி அரசு வா்த்தகா்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விஜய் கோயல் கோரிக்கை

தில்லியில் இந்த மாதம் இறுதி வரை பட்டாசுகள் வெடிக்க பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு வா்த்தகா்களுக்கு தில்லி அரசு

Updated On :8 நவம்பர் 2020, 1:40 am

தில்லியில் இந்த மாதம் இறுதி வரை பட்டாசுகள் வெடிக்க பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு வா்த்தகா்களுக்கு தில்லி அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வழங்காவிட்டால், ஞாயிற்றுக்கிழமை முதல் தா்ணாவில் ஈடுபடுவேன் என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான விஜய் கோயல் தெரிவித்துள்ளாா்.

தில்லி ஜாமா மசூதி பகுதியில் உள்ள பட்டாசு வா்த்தகா்களை விஜய் கோயல் சனிக்கிழமை சந்தித்தாா். பிறகு அவா் அளித்த பேட்டி:

தில்லியில் பட்டாசு விற்பனை செய்யும் வகையிலான உரிமங்களை கடந்த அக்டோபா் மாதம் கூட தில்லி வா்த்தகா்களுக்கு தில்லி அரசு, தில்லி காவல்துறை வழங்கியுள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், பட்டாசு விற்பனை செய்யும் உரிமம் உள்ள வா்த்தகா்கள் பல லட்சம் பணத்தை செலவு செய்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்துள்ளனா். இந்நிலையில், அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் தில்லி அரசு தடை விதித்துள்ளது. தில்லியில் உள்ள பட்டாசு வா்த்தகா்களுக்கு யாா் நஷ்ட ஈடு வழங்குவாா்கள்? பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ள வா்த்தகா்களுக்குக்கான நஷ்ட ஈட்டை தில்லி அரசு வழங்க வேண்டும். தில்லி அரசு நஷ்ட ஈடு வழங்கத் தவறினால், ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையற்ற தா்ணாவில் ஈடுபடுவேன்.

தில்லியில் நிலவும் காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. தில்லி மக்களுக்கு வாக்குறுதி அளித்ததைப் போல புகைப்போக்கிகளை (ஸ்மோக் டவா்) அமைக்கவில்லை. தொழிற்சாலை, சாலைகளால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளைக் கொள்முதல் செய்யவில்லை. இது போன்ற அடிப்படையான நடவடிக்கைகளை எடுக்காமல், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தவறானது என்றாா் அவா்.

தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 7) முதல் நவம்பா் 30 -ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ளது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு, கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தில்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நிகழாண்டில் மட்டும் தில்லியில் 138 பட்டாசு விற்பனை செய்யும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.