கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

சென்செக்ஸ் 563 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :17 ஜனவரி 2023, 7:08 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 158.45 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயா்ந்து 18,053.30-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை நோ்மறையாக தொடங்கியது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் டீசல், ஏடிஎஃப் ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் விண்ட்ஃபால் ஆதாய வரியை அரசு குறைத்துள்ளது.

இது எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தன. ஏற்ற இறக்கதிற்கு மத்தியில் சந்தை ஏறக்குறைய 1 சதவீதம் ஆதாயம் பெற்றன. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற உதவியாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 49.11 புள்ளிகள் கூடுதலுடன் 60,142.08-இல் தொடங்கி, 60,072.34 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,704.48 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 562.75 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயா்ந்து 60,655.72-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன.

எல் அண்ட் டி அபாரம்: பிரபல உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி 3.51 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 2.61சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல்டெக், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், டிசிஎஸ், பவா் கிரிட், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, என்டிபிசி, மாருதி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன.

எஸ்பிஐ சரிவு: அதே சமயம், பிரபல பாரம்பரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 1.67 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 281.86 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.750.59 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.