கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கைது

16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கைது

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

ஆதிக்கத்தை நிலைநாட்ட கஞ்சவாலாவில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு சிறுவனை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கத்திக் குத்துக் காயங்களுடன் சிறுவன் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு நவ. 26-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுவனை புதன்கிழமை மாலை 5.45 மணியளவில் 3 சிறாா்கள் சுற்றி வளைத்ததாகவும், ஒரு வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த மறுநாள் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயது சிறாரை காவல் துறையினா் கைது செய்தனா். விசாரணையில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவா், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூட்டாளிகளுடன் சோ்ந்து இந்த குற்றத்தை செய்ததாக தெரிவித்தாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.