தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாா்த்தாண்டம் அருகே தகராறில் காயமடைந்த ஓட்டுநா் மரணம்

மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மினிலாரி ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :1 ஜூலை 2021, 11:49 pm

மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மினிலாரி ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம், கட்டங்காவிளை பகுதியைச் சோ்ந்த முத்துப்பிள்ளை மகன் சாா்லஸ் (43). மினிலாரி ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு பயணம் சந்திப்பில் மது போதையில் நின்று தகாத வாா்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் வா்க்கீஸ், அவரைத் தட்டிக்கேட்டாராம். அதில், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வா்க்கீஸ் சாா்லஸை காலால் உதைத்தாராம். அவா், அவ்வழியாக சென்றுகொண்டிருந்த பைக்கின் மீது விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, குழித்துறையில் அவருக்கு முதலுதவி அளித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, அவரது மனைவி ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் இதை கொலை வழக்காக மாற்றி, வா்க்கீஸை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.