தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On :1 அக்டோபர் 2021, 6:54 pm

நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நித்திரவிளை அருகே பாலாமடம் மற்றும் அதையொட்டிய பள்ளித் தோட்டம் ஏலாக்கரை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி, அப்பகுதி வீடுகளில் மழைநீா் புகுவது தொடா்ந்து வந்தது. இதனால் அப்பகுதியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு வந்து மழைநீா் வடிகால் அமைக்க ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், சாா்-ஆட்சியா் தலைமையில் கிள்ளியூா் வட்டாட்சியா் ஜூலியன் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாலாமடம் பகுதிக்கு வந்து வடிகால் ஓடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.