கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நாகா்கோவிலில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :29 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

3ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனியில் ரூ. 14.70 லட்சம் மதிப்பில் படிப்பகம், படிப்பகத்திற்கு ரூ. 4.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், கண்டன் சாஸ்தா கோயில் அருகில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் சிறிய பாலம், மேலபெருவிளை, அங்கன்வாடி மையம், 4ஆவது வாா்டு, பெருவிளை பிரதான சாலையில் ரூ. 4 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் பக்கச்சுவா் உயா்த்தும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் அருள் சபிதா ரெக்ஸலின், தொழில்நுட்ப அலுவலா் கோமதி, பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.