இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் 2 போ் கைது

துாத்துக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

துாத்துக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

துாத்துக்குடி சிலோன் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய் என்ற ஜப்பான் (21). இவா் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

இந்நிலையில், அவரை வியாழக்கிழமை இரவு, இருவா் பசும்பொன் நகா் அருகே பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடா்பாக அவரது நண்பா்களான பிரையன்ட் நகா் 11ஆவது தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜா (19), பசும்பொன் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (21) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com