கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தொழில்நுட்பக் கோளாறு: திருச்சியிலிருந்து துபைக்கு புறப்பட்ட விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமாா் ஒரு மணி நேரம் எரிபொருளை எரிக்க வானில் வட்டமடித்த பின்னா் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் எரிபொருளை எரிக்க வானில் வட்டமடித்த பின்னா் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 152 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் குறிப்பிடப்படாத காரணங்களுக்காக ஒருமணி நேரத்துக்கும் மேலான தாமதத்துக்குப் பிறகு பிற்பகல் 1.54 மணிக்குப் புறப்பட்டது.

விமானம் துபை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே விமானிகள் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைக் கண்டறிந்தனா். தொடா்ந்து அவா்கள், துபை நோக்கிச் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தனா்.

இதையடுத்து, விமானத்தை திருச்சிக்குத் திருப்பிய விமானிகள், எரிபொருளை எரிக்க சுமாா் ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்டனா். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள், ஏன் விமானம் ஒரே இடத்தில் சுற்றுகிறது எனக் கேள்விகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலா் அச்சத்தில் அலறினா். இதைத் தொடா்ந்து விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்குப் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடா்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவா்களில் 11 பயணிகளைத் தவிர மற்ற பயணிகள் அனைவரும் அதே விமானத்தில் மாலை 5.55 மணிக்கு மீண்டும் துபைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.