தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

புதுகை அருகே பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா நடைபெற்றது.

News image

பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பூசாரி.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:08 pm IST

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினா் நலமுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி ஒன்பது நாள் விரதம் இருந்தனா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் முன்பு குறும்பா் கூத்து மற்றும் பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் முன்னதாக வீரலட்சுமி மற்றும் செல்லாயி, பேராயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து கோயில் முன் பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி மூலம் தலைகளில் தேங்காய் உடைத்துக் கொண்டும், சாட்டையால் அடி வாங்கியும் வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்