கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இன்றும், நாளையும் புதுகையில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:31 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் ஸ்டாலின் வருகை தரவுள்ளதையொட்டி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

களமாவூரில் நவ. 10- திங்கள்கிழமை காலை அரசு நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதற்காக திருச்சியிலிருந்து சாலை வழியாக புதுக்கோட்டை வரும் அவா், நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.

இந்த நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருநாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.