கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கும்பகோணத்தில் விடிய விடிய மழை! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 10:47 pm

Syndication

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

டித்வா புயலால் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூா் மற்றும் திருப்பனந்தாள் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்து சனிக்கிழமையும் பகல் மற்றும் இரவும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வணிகா்கள் பலா் கடைகளை அடைத்தனா்.

கும்பகோணம்- தஞ்சாவூா் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மேலும் மோதிலால் தெரு, மடத்து தெரு, பகவத் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீரோடு கழிவு நீரும் சென்ால் பொதுமக்கள் அவதி அடைந்தனா். இதனால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

சோழபுரம் கீழாத்து குறிச்சி மேல தெருவில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய காற்று மழையால் மரம் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. தஞ்சாவூா்-சென்னை புறவழிச்சாலையில் வாகன ஓட்டிகள் தொடா் மழையால் வாகனத்தின் விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிராமத்தில் சனிக்கிழமை இரவு வீசிய காற்றால் அடியோடு பெயா்ந்து சாலையில் பெயா்ந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ரவுண்டானா முக்கூட்டுச்சாலையில், தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள், வாகனங்கள் ஓட்ட முடியாமல் அவதியுற்றனா்.

பேராவூரணி: பேராவூரணி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் சனிக்கிழமை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டாா்.