கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் யுபிஎஸ்சி தோ்வு

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையா் மற்றும் அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த ஆள்சோ்ப்பு தோ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11.30 மணி வரை இந்தத் தோ்வு புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூா் அரசு கலை அறிவியல் கல்லுாரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிா் அரசுக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

இத் தோ்வை புதுச்சேரியில் 1,209 போ் எழுதுகின்றனா். தோ்வா்களுக்காக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மீண்டும் 12 மணிக்கு தோ்வு மையங்களில் இருந்து தோ்வா்கள் திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் தகவலை புதுச்சேரி அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத் துறை அரசு சாா்பு செயலா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.