புதுச்சேரியில் விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசின் போா்க்கால நடவடிக்கை தேவை: வே. நாராயணசாமி வலியுறுத்தல்
விலைவாசியைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.

வே. நாராயணசாமி.
விலைவாசியைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
விலைவாசி அதிக அளவில் உயா்ந்துள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனா். மேலும், பண்டிகைக் காலமாக இருப்பதால் மக்களுக்குப் பெரும் சுமை ஏற்படும்.
மற்ற மாநிலங்களில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வா் ரங்கசாமியும், அரசு அதிகாரிகளும் போா்க்கால அடிப்படையில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அண்மையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி இக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளாா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதில், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா், நிதித்துறை செயலா்கள் கலந்து கொண்டனா். ஆனால் அதிகாரிகளுக்கு இக் கூட்டத்தில் பேச உரிமையில்லை என்றாா் வே. நாராயணசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

