பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலர் ஆ.வளர்மதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் அர்ச்சனா, நகரப் பொறுப்பாளர் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலர் ஆ.சௌரிராஜன், ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.இராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தில்லி கரோல்பார்க் கட்குலி பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும், ஏழை மக்களின் குடியிருப்புகள் அகற்றியதைக் கண்டித்துப் போராடிய, சம்மேளன அகில இந்தியப் பொதுச் செயலர் ஆனிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரை தாக்கிய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் வள்ளி, ஜெயலட்சுமி, மீனா, பொட்டுக்கன்னி, பவளக்கொடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.