துவரை இனிப்பு சுண்டல்
செய்முறை: துவரையை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து எண்ணெய்விடாமல் வறுத்துகொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
துவரை- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
Advertisement
Advertisement
வெல்லம்- 2 அச்சு
ஏலக்காய்- 4
உப்பு- அரை சிட்டிகை
செய்முறை:
துவரையை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து எண்ணெய்விடாமல் வறுத்துகொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் தேவையான தண்ணீரைவிட்டு துவரையை போட்டு உப்பை போட்டு, வேக வைக்க வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீரைவிட்டு வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்தவுடன் துவரை, தேங்காய்த் துருவலைப் போட்டு ஏலப் பொடியையும் நன்றாகக் கிளறி சுண்டல் சேர்த்து வரும் வரை கிளறி இறக்க வேண்டும். பாகை முற்றி விடாமல் செய்ய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.