விவசாயம்

மண்புழு உரத் தயாரிப்பு தொழில்நுட்பம்: வேளாண்துறை யோசனை

தினமணி


மண்புழு உரம் என்பது மண்புழு உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. மண்புழு உரம் தயாரிப்பு நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மக்கச் செய்வதற்கான ஒரு சரியான பயனுள்ள செலவு குறைந்த மற்றும் திறமையான மறுசுழற்சி தொழில் நுட்பமாகும். 
மண் புழு வளர்ப்பு முறை, உரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம்  குறித்து வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன்   வெளியிட்ட செய்திக் குறிப்பு:


மண்புழு உரம்  உற்பத்தி செய்யும் முறை: மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டியின் அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருப்பது நல்லது.நீளம் இடவசதிக்கு ஏற்ப இருக்கலாம்.
அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களைப் பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். குழியில் காய்ந்த எருவை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண்புழுக்களைவிட வேண்டும். 
 சாணத்தை உணவாக எடுத்துக்கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும். மண்புழுக்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க தென்னங்கீற்றைக் கொண்டு குழியை மூட வேண்டும். ஈரப்பதம் மற்றும் தட்பவெப்பநிலையை உர குழியில் சரியாகப் பராமரிப்பது நல்லது. வாரம் இரு முறை உரக் கழிவுகளைக் கிளரிவிடவேண்டும்.வெப்பநிலை பராமரிக்க வாரம் இரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.ஒரு மாதத்திற்குப் பிறகு அதன் நிறம் கருப்பாகவும் அளவு பாதியாகவும் மாறும்.
மண்புழுக்கள் விரைவாகவும் திறமையாகவும் அங்கக கழிவுகளைச் சிதைக்கும் திறன் கொண்டது. மண்புழுக்கள் கழிவுகளை உரமாக மாற்றும் போது துர்நாற்றம் வீசாது. அதுவே இதன் முக்கிய அம்சமாகும்.

மண்புழு உரத்தின் பயன்கள்
   மண்புழு உரமிடுவதால், மண் அமைப்பு மேம்படும்.
   நீர்ப் பிடிப்பு திறனை அதிகரிக்கும்
   மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.
   மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் 
      தாவரங்களினால் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் 
      நீரில் எளிதில் கரையும் பொருளாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT