முகப்பு
பெங்களூரு

மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: ஷோபா கரந்த்லஜே

ஷிமோகா, ஜன. 8: மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மாநில மின் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்தார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநி

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

ஷிமோகா, ஜன. 8: மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மாநில மின் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்தார்.

 இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநிலத்தில் குறைந்த அளவு மின்சார உற்பத்தி இருந்துவரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் 156 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டது. தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டது. இது கர்நாடக வரலாற்றில் எந்த அரசுமே செய்திடாத சாதனையாகும். கோடைகாலத்தில் 160 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை தீட்டி வருகிறது.

மேலும் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று நான் கூறியதாக செய்திகள் வெளியாயின. ஒருபோதும் அப்படி கூறவில்லை. தற்காலிமாக மின் கட்டண உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது என்றுதான் தெரிவித்தேன். மாநிலத்தில் மின் உற்பத்தி குறைவாகக் கிடைக்கும் நிலையில், விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்கமுடியாதது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →