வருமான வரி உதவி மையம் திறப்பு
பெங்களூரில் வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள வணிக வரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள வணிக வரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் ஊதியம் பெறும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக, பெங்களூர், பெல்லாரி சாலையில் கங்கா நகரில் எச்.எம்.டி. பவனில், வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், துறையின் பெங்களூர் அலுவலகத் தலைமை ஆணையர் கே. சத்யநாராயணா கலந்துகொண்டு, மையத்தைத் தொடக்கி வைத்தார். இந்த மையத்தை வருமான வரி தொடர்பான பிரச்னைகளுக்கு ஊதியம் பெறும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.