பெங்களூரு

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திகளர் ஷத்ரிய விழிப்புணர்வு மாநாட்

தினமணி

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திகளர் ஷத்ரிய விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவர் பேசியது:

பாரம்பரியம் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த திகளர் ஷத்ரிய மாநாட்டில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சமுதாயத்திற்கு உரிய சமூக நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் திகளர் சமுதாயம் பின்தங்கியுள்ளது. திகளர் சமுதாயத்திற்குத்  தேவையான கல்வி, நிதி, நிலத்தை வழங்க அரசு தயாராக உள்ளது. எந்த சமுதாயத்திற்கு கூடுதலாக உதவிகள் தேவைப்படுகிறது என தெரிந்து கொள்ள ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றார் சித்தராமையா. முன்னதாக, திகளர் சமுதாயத்தின் புகழ் பரப்பும் பாடல் குறுந்தகட்டை அவர் வெளியிட்டார்.  மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT