"2 ஆயிரம் முகவர்களை நியமிக்க பேடிஎம் திட்டம்'
வர்த்தகத்தைப் பெருக்க 2 ஆயிரம் முகவர்களை நியமிக்கவும், 10 லட்சம் சிறு வியாபாரிகளை பங்குதாரர்கள் ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் குணால் அபிஷேக் தெரிவித்தார்.
வர்த்தகத்தைப் பெருக்க 2 ஆயிரம் முகவர்களை நியமிக்கவும், 10 லட்சம் சிறு வியாபாரிகளை பங்குதாரர்கள் ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் குணால் அபிஷேக் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பெங்களூரில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதற்கு பேடிஎம் போன்ற நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளன.
கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பேடிஎம் நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிகழாண்டு டிசம்பருக்குள் 2 ஆயிரம் முகவர்களை நியமிக்கவும், 10 லட்சம் சிறு வியாபாரிகளை பங்குதாரர்கள் ஆக்கவும் முடிவு செய்துள்ளோம்.
பெங்களூருவில் செல்லிடப்பேசியில் மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து, குடிநீர் கட்டணத்தையும் செல்லிடப்பேசியில் செலுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
வர்த்தகர்கள் மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை பணப் பரிவத்தனை செய்யவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக 10 பிராந்திய மொழிகளில் தகவல்களை அளித்து வருகிறோம் என்றார்.