பெங்களூரு

கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

தினமணி

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வியாழக்கிழமை தொடங்கிய அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தில் பரவலாகவும், வடகர்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்தது.
 கடந்த 24 மணி நேரத்தில் பாகல்கோட் மாவட்டத்தின் கேரூரில் அதிகபட்சமாக 110 மி.மீ. பதிவாகியுள்ளது. உடுப்பி மாவட்டத்தின் சித்தபுரா, கொப்பள் மாவட்டத்தின் எலபுர்காவில் தலா 70 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் கார்காலா, குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது ஆக.19-இல் கடலோரகர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, கர்நாடகத்தின் வடக்கு உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை கூடிய மழை பெய்யக்கூடும்.
 அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், தென்கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட கர்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 பெங்களூருவில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகப்பட்சமாக 27 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT