பெங்களூரு

ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்துகர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல்வரின் தொழில்திறன் கர்நாடகம் திட்டத்தின்கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒருமாதம் நடைபெறும் இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். விண்ணப்பிக்கும்போது 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை இயக்கி ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே கனரக வாகனங்களை ஓட்டுபவர்களும் பயிற்சி சேர்ந்து பயனடையலாம். 3 புகைப்படங்களுடன் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். 
ஓட்டுநர்பயிற்சி 30 நாள்களுக்கும், தொழில்நுட்பப்பயிற்சி 90 நாள்களுக்கும் நடைபெறும். இப்பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பார்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் இலவசமாக தரப்படும். பயிற்சியின்முடிவில் சான்றிதழ்களோடு, ஓட்டுநர் உரிமம் பெற்றுதரப்படும். மேலும் விவரங்களுக்கு 080-22221652, 7760992539 ஆகிய தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT