பெங்களூரு

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மீது பாஜக குற்றச்சாட்டு

தினமணி

கர்நாடக அரசுக்குச் சொந்தமான நிலத்தை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிக்கு சொந்தமான நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் என்.ஆர்.ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பங்குதாரராக உள்ள எம்பஸி கோல்ட் லிங்க் ஜவுளிப் பூங்கா நிறுவனம் பெங்களூரு கிழக்கு வட்டம், வர்த்தூர் ஒன்றியம் செல்லகட்டா கிராமத்தில் 52.03 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது அதனுடன் அரசுக்குச் சொந்தமான ரூ. 850 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. முறைகேடு நடந்துள்ளதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீது லோக் ஆயுக்த, பெங்களூரு மாநகர அதிரடிப் படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆக்கிரமிப்புக்கு உதவிய அரசு அலுவலர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT