பெங்களூரு

பெங்களூரு-திருப்பதி இடையே  சிறப்பு ஆன்மிக பயணத் திட்டம்: திருச்சானூர் வரை நீட்டிப்பு

DIN

பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு இடையே மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள சிறப்பு ஆன்மிகப் பயணத் திட்டத்தை திருச்சானூருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக்கழத்தின் சார்பில் பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு மே 12-ஆம் தேதி முதல் சிறப்பு ஆன்மிகப் பயண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திட்டத்தில் கூடுதலாக திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தேவிகோயிலும் சேர்க்கப்பட்டுள்ளது, இந்ததிட்டத்தில் ஐராவத் மல்ட்டி ஆக்சியல் சொகுசுப் பேருந்து பயணம், தங்கும்விடுதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தேவிகோயில் தரிசனம், காலை சிற்றுண்டி, திருப்பதி-திருமலை பேருந்து பயணம், திருமலையில் விரைவுதரிசனம், மதிய உணவு உள்ளிட்டவசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது.
இதற்கு கட்டணமாக வாரநாள்களில் பெரியவர்களுக்கு ரூ.2 ஆயிரம், சிறியவர்களுக்கு ரூ.1700, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெரியவர்களுக்கு ரூ.2,500, சிறியவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
இதில் பயணிக்க 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவுசெய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7760990034, 7760990035 ஆகிய செல்லிடப்பேசிகளை அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு ‌w‌w‌w.‌k‌s‌r‌tc.‌i‌n​ என்ற இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT