பெங்களூரு

ஆட்சியைப் பிடிக்க மாநில கட்சிகளின் உதவியை தேசிய கட்சிகள் நாடுகின்றன

DIN

ஆட்சியைப் பிடிக்க மாநில கட்சிகளின் உதவியை தேசிய கட்சிகள் நாடுகின்றன என்று முன்னாள் பிரதமரும், மஜத தலைவருமான தேவெ கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு கே.ஆர்.புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஜத மாநாட்டில்,   அவர் பேசியது:-
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை  பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  இது அரசியல் முக்கியவம் வாய்ந்த சந்திப்பாகும்.
தேசியக் கட்சிகள் மத்தியிலும்,  மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க மாநில கட்சிகளின் உதவியை நாடி வருவதை இது எடுத்துகாட்டுகிறது.
அண்மைக்காலமாக காங்கிரஸ்,  பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.  மாநில கட்சிகளை ஆதரிப்பது அதிகரித்து வருகிறது.  
காங்கிரஸில் 39 ஆண்டு காலம் பணியாற்றிய மறைந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவுக்கு கே.ஆர்.புரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி  மறுத்தது. இதனால் அவர் மஜதவில் இணைந்தார்.  அவருக்கு மாநிலத் தலைவர் பதவியை மஜத அளித்தது.
காங்கிரஸ்,  பாஜகவில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதை,  கெளரவம் வழங்கப்படுவதில்லை.  இதனால் அந்தக் கட்சிகளில் இருந்து பலர் விலகி மஜதவில் இணைந்து வருகின்றனர்.
கர்நாடகத்தின் அடுத்த எதிர்காலம் மஜத என்பதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.  எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மஜதவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணா ரெட்டி, சட்ட மேலவை உறுப்பினர் டி.ஏ.சரவணா,  துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி,  பெங்களூரு மாவட்ட மஜத தலைவர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT