பெங்களூரு

மக்கள்தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் உற்பத்தி: ஓய்வு பெற்ற நீதிபதி வலியுறுத்தல்

DIN

மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் உற்பத்தியாக வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வெங்கடாசலய்யா கூறினார்.
உலக உணவு பாதுகாப்பு தின விழா பெங்களூரு ஹெப்பாளில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்று அவர் பேசியது:-
சர்வதேச அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.  இதற்கு ஏற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அறிவியல் விஞ்ஞானிகள் உணவு உற்பத்திக்கான நவீன தொழில்ட்பங்களைக் கண்டறிந்து வருகின்றனர். அதனை பயன்படுத்தி, விவசாயிகள் பயனடைய வேண்டும்.
விவசாயிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும்.  பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்து காய்கனிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார் அவர்.  நிகழ்ச்சியில் தேஜஸ்வினி அனந்த்குமார்,  தேசிய ஆராய்ச்சி மையத்தின் ஓய்வு பெற்ற மேலாண் இயக்குநர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT