"குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன: அமைச்சர் ராமலிங்க ரெட்டி'
மாநிலங்களில் குற்றங்கள் நிகழ்வது இறங்குமுகமாக உள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
மாநிலங்களில் குற்றங்கள் நிகழ்வது இறங்குமுகமாக உள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பூஜ்யம் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கொண்டுவந்த பிரச்னைக்கு பதிலளித்து அவர் கூறியது:
நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், மாநிலத்தில் குற்றங்கள் நிகழ்வது இறங்குமுகமாக இருப்பதை கவனிக்கலாம். கடந்த காலத்தில் 6.7 சதவீதமாக இருந்த குற்ற நிகழ்வுகள், 4 ஆண்டுகாலத்தில் படிப்படியாக குறைந்துள்ளன. போதைப்பொருள்களை சேமித்துவைப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களை வெகுவாக பாதிக்கும், போதைக்கு அடிமையாக்கும் அனைத்தும் சட்டவிரோத அம்சங்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் இது தொடர்பான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் என்பது காகிதங்களில் மட்டும் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் நிரந்தரமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர்சட்டத்தில் கைது செய்வது, மாநிலம் கடத்துவது உள்ளிட்ட சட்டச்செயல்களில் காவல்துறை ஈடுபட்டுவருகிறது என்றார்.