முகப்பு
பெங்களூரு

பிப்.24-இல் அகில கர்நாடக பிராமணர் சங்க மாநாடு

பெங்களூரில் பிப். 24, 25-ஆம் தேதிகளில் அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவு சார்பில் மாநாடு நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பெங்களூரில் பிப். 24, 25-ஆம் தேதிகளில் அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவு சார்பில் மாநாடு நடைபெறுகிறது.
பெங்களூரு பத்திரிகையாளர்  சங்கத்தில் புதன்கிழமை அகில கர்நாடக பிராமணர் மகா சபையின் தலைவர் கே.என்.வெங்கடநாராயணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவின் 2 நாள் மாநாடு பெங்களூரு பசவனகுடி நேஷனல் கல்லூரித் திடலில் பிப். 24-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிராமணர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்க கோரிக்கை வைக்கப்படும். 
பிராமணர் மகாசபையில் சார்பில் கல்வி மையம் தொடங்க 10 ஏக்கர் நிலம், ரூ. 10 கோடி நிதி வழங்கவும் கோரிக்கை வைக்கப்படும். மாநாட்டையொட்டி பிப். 25-ஆம் தேதி மாலை இசை கச்சேரி நடைபெறும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மகாசபையில் துணைத் தலைவர் கிருஷ்ணா, பிரசார அணித்தலைவர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →