பள்ளிகள் திறப்பு: ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு தடுப்பூசி
மாநிலத்தில் விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதால், ஆசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளோம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
மாநிலத்தில் விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதால், ஆசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளோம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநிலத்தில் விரைவில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் ஆசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் 9, 10 ஆம் வகுப்புகளைத் திறக்க முடிவு செய்துள்ளோம். அதோடு, பியூசி வகுப்புகளையும் திறக்க திட்டமிட்டு வருகிறோம். மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
கரோனா 3-ஆவது அலை பாதிப்பை எதிா்கொள்ள நேரிடக் கூடும் என்று அச்சம் இருந்தாலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) அறிவுரையின் பேரில், பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அரசு அமைத்துள்ள சுகாதார வல்லுநா் குழுவின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்வாா் என்றாா்.