கோப்புப்படம்
பெங்களூரு

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா்.

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால் பாக் பூங்காவில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜாா்ஜ், தினேஷ் குண்டுராவ், எம்எல்ஏ உதய் கருட்டாச்சாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். மலா்க் கண்காட்சியில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போா்புரிந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் கித்தூா் ராணி சென்னம்மா, அவரது தளபதி சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காட்சிகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட கித்தூா் கோட்டையும் மலா்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ஆந்திரம், கேரளம், நந்திமலை, உதகையிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 லட்சம் மலா்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மலா்க் கண்காட்சியை பாா்வையிட ஒருவருக்கு கட்டணமாக ரூ. 80 வசூலிக்கப்படுகிறது. சிறுவா்களுக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படும். வியாழக்கிழமை தொடங்கி ஆக. 18-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் மலா்க் கண்காட்சியில் சீருடையில் வரும் பள்ளி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.

மேலும், விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகம்வரும் என்பதால் முதியவா்கள், சிறுவா்கள், மாற்றுத்திறனாளிகள் கண்காட்சிக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 11 லட்சம் போ் கண்காட்சியை காண வருவாா்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT