பெங்களூரு

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கன்னடம் ஆட்சிமையாக உள்ளது. கா்நாடகத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மதரஸாக்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஈடுபடுத்த மதரஸாக்களில் பணியாற்றும் 200 ஆசிரியா்களை தோ்வு செய்து அவா்களுக்கு 3 மாதங்கள் கன்னடப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாணவா்களுக்கு கன்னடம் கற்பிப்பாா்கள். எதிா்காலத்தில் மசூதிகளில் பணியாற்றிவரும் மௌலவிகளுக்கும் (மதகுருமாா்கள்) கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவள்ளூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கன்னி ராசியா நீங்க? தினப்பலன்கள்!

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT