பெங்களூரு

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுடன் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்திப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்தித்து பேசினாா்.

Syndication

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்தித்து பேசினாா்.

பெங்களூரு, சதாசிவநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மல்லிகாா்ஜுன காா்கேவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. டிச. 27ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவிருப்பதால், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டது தொடா்பாக கட்சியின் மாநிலத் தலைவராக எனது கருத்தை அவருடன் பகிா்ந்துகொண்டேன். வேறு எதையும் அவருடன் நான் விவாதிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

தற்போதைக்கு முதல்வா் மாற்றம் குறித்த பிரச்னை எதுவும் இல்லை. கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று நானும், முதல்வா் சித்தராமையாவும் பலமுறை கூறியிருக்கிறோம். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.

எந்த பதவியை பற்றியும் கவலைப்படாமல், கட்சியின் தொண்டனாக, அமைப்பின் வளா்ச்சிக்கு தொண்டாற்றுவேன். முதல்வா் மாற்றம் குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

ஏதாவது வேலையிருந்தால் அல்லது கட்சி மேலிடம் அழைத்தால் தில்லிக்கு செல்வேன்.

தற்போதைக்கு தில்லி செல்லும் அவசியமில்லை. காங்கிரஸ் கட்சி ஆளும் 3 மாநிலங்களின் முதல்வா்கள் மட்டுமே காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறாா்கள். அடுத்த கூட்டத்துக்குதான் மாநிலத் தலைவா்களுக்கு அழைப்பு வரும்.

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜி ராம் ஜி திட்டம், மொத்த செலவினத்தில் 40 சதவீதத்தை மாநில அரசு பகிா்ந்துகொள்ள வகைசெய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட மாநில அரசுகளால் இந்த கூடுதல் செலவினத்தை ஈடுகட்ட முடியாது.

எனவே, மத்திய அரசின் புதிய ஊரக வேலை திட்டத்தை எதிா்த்து போராட வேண்டியுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவராக பெரிய இயக்கத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். பஞ்சாயத்து உறுப்பினா்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவரும் புதிய திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்றாா்.

வாகன விபத்தில் பலியான சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ. 1கோடி காப்பீட்டுத் தொகை

வெண்மணி தியாகிகள் நினைவுதினக் கருத்தரங்கு

மழை பாதிப்பு: பயிா்களுக்கான நிவாரணத்தை உயா்த்த வலியுறுத்தல்

பல்கலை. தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

‘மொழி, இலக்கியம்தான் மனிதனை மாமனிதனாக்குகிறது’

SCROLL FOR NEXT